Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும்  ஸ்ருதிஹாசன் விஜய், அஜித் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் லாபம் திரைப்படத்திலும் நடிகர் பிரபாஸுடன் சலார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது . மேலும் அதில் ‘மற்றொரு பெண் மற்றொரு கதை. மீண்டும் அவளை சந்திப்பீர்கள்’ என்று அவர் பதிவிட்டுள்ளார். இது ஸ்ருதிஹாசன் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |