நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் நடிகை ரியா சக்கர போர்த்திக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்கரபோர்த்தியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடிகை ரியாவின் சகோதரன் சோபிக்கும் கைது செய்யப்பட்டார்.
இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகை ரியா சக்கரபோர்த்தியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 6 வரை நீட்டித்து மும்பை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரியா மற்றும் அவரது சகோதரர் சோஃபிக் இருவரும் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.