நடிகை மாளவிகா மோகனன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை மாளவிகா மோகனன் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் . சமூக வலைத்தளங்களிலும் நடிகை மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
https://twitter.com/MalavikaM_/status/1349617203226816514
மேலும் இவர் சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதில் ‘இந்த பொங்கலில் நன்றி சொல்ல ஏராளமான காரணங்கள் இருக்கின்றன . அனைவருக்கும் பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். கேரளா ஸ்டைல் உடையில் தலையில் மல்லிகை பூவுடன் மாளவிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது .