நடிகை கயல் ஆனந்திக்கு இன்று இரவு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . இதனால் ‘கயல்’ ஆனந்தி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார் . இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டி வீரன் ,பரியேறும் பெருமாள் ,விசாரணை ,என் ஆலோட செருப்பைக் காணோம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார் . தற்போது நடிகை ஆனந்தி ஏஞ்சல், டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும் ,கமலி ஃப்ரம் நடுக்காவேரி ,ராவண கூட்டம் ,அலாவுதீனின் அற்புத கேமரா மற்றும் தெலுங்கில் ஜாம்பி ரெட்டி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் .
இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரட்டீஸ் என்பவருக்கும் நடிகை ஆனந்திக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது . இது காதல் திருமணம் இல்லை, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என கூறப்படுகிறது . இன்று இரவு வாராங்கல்லில் இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது . மேலும் சினிமா துறையினர் யாரும் இந்த திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை எனத் தெரிகிறது .