Categories
கிரிக்கெட்

நடராஜனுக்கு பதிலாக …. ஹைதராபாத் அணியில் இணைந்த புதிய வீரர்….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு பதிலாக புதிய வீரரை ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது .

14 வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அப்போது  போட்டிக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த  தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது .

இதனால் அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் .இந்நிலையில் நடராஜனுக்கு மாற்று வீரராக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவரான உம்ரான் மாலிக்கை  ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .உம்ரான் மாலிக் இதுவரை ஒரு டி20 போட்டியிலும், லிஸ்ட் ‘ஏ’ போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

Categories

Tech |