அமெரிக்க நாடாளுமன்றத்தின் கேபிடால் கட்டிடத்தின் முன்பு மர்மநபர் தாக்கியதில் அதிகாரி உட்பட சக ஊழியர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர்.
அமெரிக்கா அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன்பு மர்ம நபர் ஒருவர் செரான் என்ற நீல நிற காரில் வேகமாக வந்து பாதுகாப்பு பணியில் இருந்த 2 அதிகாரிகளின் மீது மோதியதால் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் காரிலிருந்து ஓட்டுநர் கீழே குதித்து அதிகாரியை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் உயிரிழந்தவர் 18 ஆண்டுகாலமாக பணியாற்றி வரும் கேபிடால் கட்டிடத்தின் பாதுகாப்பு அதிகாரி வில்லியம் பில்லி இவான்ஸ் என்பது குறிப்பிடதக்கது .அந்த ஓட்டுநர் தப்பிக்க முயன்றபோது கேபிடால் போலீசார் சுட்டுக்கொன்றனர். அக்காரில் வந்த ஓட்டுநரின் அடையாளம் எதுவும் தெரியவில்லை மேலும் இந்த தாக்குதல் நோக்கம் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.
இந்த தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்து வாஷிங்டன் பெருநகர காவல்துறை உயர் அதிகாரி ராபர்ட் கன்டீ இது பயங்கரவாத தாக்குதலின் நோக்கமாக தெரியவில்லை எனவும் இது குறித்த விசாரணையை தீவிரமாக மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த தாக்குதலின் காரணமாக கேபிடால் கட்டிடத்தின் ஒரு பகுதி மூடப்பட்டு உள்ளே இருந்து எவரும் வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கபட்டது . மேலும் வெளியே இருந்து உள்ளே செல்வதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவித்த அதிபர் ஜோ பைடன் மற்றும் மனைவி ஜில் பைடன் ஆகியோர் கேபிடால் பாதுகாப்பு அதிகாரி வில்லியம் இறப்பும் மற்றும் சக ஊழியர்கள் உயிருக்கு போராடி வருவதை நினைக்கும்போது எங்கள் மனம் மிகுந்த வேதனை அடைகிறது என்று மனமுடைந்து இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு அதிகாரியின் தியாகத்தைப் பாராட்டி வெள்ளை மாளிகையில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.