Categories
தேசிய செய்திகள்

நடைப்பயணம் பற்றி கவலைப்பட எதுவுமில்லை!… ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்?…. மத்திய மந்திரி பேச்சு….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மத்திய மந்திரியான ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பதாவது “நமது நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ராகுலுக்கு ஒரு போதும் கிடைக்காது. வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றியடைந்தால், ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்..?

ஆகவே 2024-ல் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 40 இடங்களுக்கு மேல் பெறாது. ராகுல்காந்தியின் நடைப்பயணம் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் எதற்காக பயப்படவேண்டும்?. நரேந்திர மோடி நம் வலிமையான பிரதமர் ஆவார். அவரது தலைமையில் நாடு வேகமாக முன்னேறுகிறது, வளர்ச்சியின் திசையில் செல்கிறது. காங்கிரஸ் கட்சி தான் பயத்தில் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |