Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடிரென காணாமல் போன நாய்குட்டிகள்…. வாலிபரின் இரக்கமற்ற செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

நாய்க்குட்டியை கடத்திச்சென்று கொடுமை செய்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கம்மாளர் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜபாளையம் நாய் குட்டி ஒன்று 60,000 ரூபாய்க்கு வாங்கி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவற்றின் குட்டிகள் திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் பல இடங்களில் நாய்க்குட்டிகளை தேடி அலைந்துள்ளார். அப்போது மைசூர் கிராமத்தில் வசிக்கும் பியோ என்ற வாலிபர் நாய்க்குட்டியை வைத்திருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த நாகராஜன் அங்கு சென்று பார்த்த போது நாய்க்குட்டியின் வால்  மற்றும் காது அறுக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தட்டி கேட்ட போது கோபமடைந்த பியோ நாகராஜனை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் இது குறித்து நாகராஜன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து நாய்க்குட்டிகளை மீட்டு நாகராஜனிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |