தெலங்கனா முதல்வரின் மகளும், டிஆர்எஸ் எம்எல்சியுமான கவிதா, என்டிஏ(NDA) அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவானது என்று குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது “இந்த நாட்டின் காவலர்கள் என கூறிக்கொள்ளும் பா.ஜ.க, வங்கிகளின் கார்ப்பரேட் கடன் செலுத்தாதவர்கள் பொது பணத்தை கொள்ளையடிக்கும் போது தூங்குகிறது. அவ்வாறு தூங்கும் காவலர்கள் நமக்கு தேவையில்லை.
நம் நாட்டின் செல்வம் நிலைத்திருப்பதற்கு பொறுப்புள்ள தலைவர்கள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேர்மையாக இருந்தால், இந்த கொள்ளையர்கள் அனைவரையும் மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அதுமட்டுமின்றி விவசாயிகள், ஏழை மக்கள் மீது சுமை சுமத்துவதும், பால், தயிர் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிதிப்பதும் நாட்டை வழிநடத்தும் சரியான வழி இல்லை” என்று கூறினார்.