வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஷால் நடித்துள்ள படம் “லத்தி”. இதை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கி இருக்கிறார். இவற்றில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். ராணா புரொடக்ஷன் சார்பில் ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரிக்கின்றனர். லத்தி படம் வரும் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தற்போது நடிகர் விஷால் நேயர்களுக்கு பேட்டியளித்தபோது “லத்தி திரைப்படம் பற்றியும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, மருது திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். இதற்கிடையில் பாபா பாஸ்கர் மாஸ்டரிடம் அடிக்கடி நான் தனுஷ் கிடையாது என்று கூறுவேன். மேலும் நீங்கள் தனுஷிற்கு கற்றுக்கொடுக்கக்கூடிய டான்ஸை எனக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்” என பல்வேறு விஷயங்களை விஷால் பகிர்ந்துள்ளார்.