கோவைக்கு வருகை புரிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரு விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற பெருமையை விட நான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியிருக்கிறார். மேலும் அதிமுகவாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் அனைவருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. கோவையை திமுக அரசு புறக்கணித்து விடும் என்று பத்திரிகையாளர்கள் பேசினார்கள். அவை பொய் என்று செந்தில் பாலாஜி நிரூபித்துக் காட்டியிருக்கிறார் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.