Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் சீக்கிரமா ரிட்டயர்டு ஆயிடுவேன்”….’வேற பிளேயரை ரெடி பண்ணுங்க’ …’ஷாக் கொடுத்த முகமது ஷமி’ …!!!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, கூடிய விரைவில் ஓய்வு பெற போவதாக தெரிவித்துள்ளார் .

இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்களை போலவே, பந்து வீச்சாளர்களும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்கின்றன. அந்த வகையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013 ம் ஆண்டில் சர்வதேச போட்டியின் மூலம் அறிமுகமானார். அவர் தற்போது வரை சிறப்பாக பந்துவீசி ரசிகர்களை கவர்ந்துள்ளார். அத்துடன் அவர் 50 டெஸ்ட் போட்டிகள், 79 ஒருநாள் தொடர் மற்றும் 12 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறும்போது, நான் விரைவில் ஓய்வு பெற்று விடுவேன் என்று கூறியுள்ளார் .

இதனால் என்னுடைய இடத்திற்கு வேறு ஒரு வீரரை, தேர்வு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். நான் இந்திய அணியில்  சர்வதேச போட்டிகளில் இடம்பெற்று,  பல வருடங்களாக விளையாடி வருவதாகவும், என்னிடம் ஆலோசனை கேட்கும் இளம் வீரர்களுக்கு ,எனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பதாகவும், அவர் தெரிவித்தார்.  நான் எப்போது வேண்டுமானாலும்  ஓய்வு பெறுவதற்கு  வாய்ப்பிருப்பதாகவும், இதற்காக வேறு ஒரு வீரரை  உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார். இதனால் என்னுடைய ஓய்வை அறிவிக்கும் போது, இந்திய அணியில் மற்றொரு வீரர், எனக்கு மாற்றாக தயாராக இருப்பார் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்தநிலையில் தற்போது ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாட உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |