இங்கிலாந்தில் வித்தியாசமான வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லின்கன்ஷையர் என்ற இடத்தில் ஈவி(20) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தான் பிறந்து இருக்கவே கூடாது தனக்கு எப்படித்தான் பிறப்பதற்கு என்ற அடிப்படையில் தன் தாயின் மருத்துவர் மீது ஈவி வழக்கு தொடர்ந்தார். இதற்கான காரணம் ஈவி பிறக்கும் போதே ஸ்பைனா பிஃ பிடா என்ற முதுகுத்தண்டுவட குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். 24 மணி நேரமும் ஈவியின் உடல் டியூபுகளுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மற்றவர்களின் உதவி இல்லாமல் இவரால் வாழ முடியாது.
இந்த பாதிப்பு அதிகமாக இருந்தால் ஈவி வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும். இத்தகைய தண்டுவட பாதிப்புடன் ஈவி பிறந்ததற்கு காரணம் அவரது தாய் போலிக் ஆசிட் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கவில்லை. இதனால் ஈவி தன்னுடைய தாயின் மருத்துவரான டாக்டர் பிலிப் மீது வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கானது லண்டன் ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
அப்போது மருத்துவரின் சரியான ஆலோசனை வழங்கப்படாமல் ஈபியின் தாய் போதிய ஊட்டச்சத்து சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்ளத் தவறியதால் தான் இப்படி ஒரு பாதிப்போடு அவர் பிறந்து சிரமப்பட்டு வருகிறார் என்பதை நீதிபதி உறுதி செய்து கொண்டார். இதனால் மிகப்பெரிய தொகையை ஈவிக்கு ஈடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு தொகையை நஷ்ட ஈடாக வழங்க கூறியுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இழப்பீடு தொகை ஈவிக்கு வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் மருத்துவ மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இருக்கக்கூடும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.