Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் அருகே வீட்டில் பட்டாசு தயாரிப்பு – 2 பேர் உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வீட்டில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

பள்ளிபாளையம் அருகே உள்ள கொள்ள பாளையத்தில் தோட்டம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவரது வீட்டில்  ரங்கராஜன் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் தனது நண்பர்களுக்கும் சேர்த்து வீட்டில் பட்டாசு வாங்கி வைத்து இருந்தார். இந்த நிலையில்  வீட்டில் இருந்து திடீரென நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் வீட்டின் உரிமையாளர் ராஜா மற்றும் அவரது உறவினர் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தின் போது அருகில் இருந்த மூன்று பெட்டிகளில் இருந்த சிலிண்டர்களும்  வெடித்து  நெருப்பு பரவியது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர் தீ விபத்து நிகழ்வு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |