Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“பணத்தை பறிச்சிட்டு போயிட்டாங்க” நாடகமாடிய லாரி ஓட்டுநர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ரூபாய் ஏழு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து நாடகமாடிய லாரி டிரைவர் கைது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலக்கோட்டை பகுதியில் தங்ககுமார் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு முட்டை வியாபாரம் செய்யும் ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களிடம் உதயகுமார் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரி ரூபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை லாரி டிரைவர் உதயகுமாரிடம் கொடுத்து நாமக்கல் சென்று முட்டைகளை கொள்முதல் செய்து வருமாறு கூறியுள்ளார். அவர் பணத்தை பெற்றுக் கொண்டு முட்டைகளை கொள்முதல் செய்வதற்காக கிளம்பியுள்ளார்.

இதனை அடுத்து உதயகுமாரை தொடர்புகொண்டு பேசியபோது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சலவாதி கிராமத்தில் லாரிகள் நிறுத்தும் இடத்தில், தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகவும் அப்போது மர்ம நபர்கள் வந்து ரூபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பறித்து சென்றதாகவும் ராஜகுமாரியிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ராஜகுமாரி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பெயரில் திண்டிவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயகுமாரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரை உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆறுமாத காலமாக தான் வறுமையில் வாடுவதாகவும், முட்டை வாங்குவதற்காக கொடுத்த பணத்தை தனது நண்பர்களான சேகர், கார்த்திக் போன்றோரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பணத்தை எடுத்துக் கொண்டதை மறைப்பதற்காகவே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிப்பறி செய்ததாக நாடகமாடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரை கைது செய்தனர். பின்னர் அவரது நண்பர்களான கார்த்திக், சேகர் என்பவரிடம் இருந்த மொத்த பணத்தையும் மீட்டு ராஜகுமாரியிடம் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்திய காவல்துறையினரை சுக்கிரன் ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |