இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான முறைகள் இருக்கிறது. இதில் காலம் காலமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஜிமெயில் தான் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜிமெயில் நிறுவனத்தில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் சில சமயங்களில் வந்துவிடும். ஒருவேளை நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தால் அதை சரி செய்யும் நடைமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் gmail பாக்ஸை ஓபன் செய்த பிறகு கீழே சதுரமாக அல்லது வட்டமாக இருக்கும் ஒரு சிறிய பாக்ஸில் பேனா போன்ற சிம்பிள் இருக்கும்.
அதற்குள் சென்றால் மெயில் டைப் செய்யும் பாக்ஸ் ஓபன் ஆகிவிடும். அதன்பிறகு வலது புறமாக மேல்பக்கம் பார்த்தால் 3 புள்ளிகள் இருக்கும். அந்த புள்ளிகளை கிளிக் செய்தால் நிறைய ஆப்ஷன்கள் வரும். அதில் மூன்றாவது இடத்தில் இருக்கும் confidential mode என்ற ஆப்ஷன் இருக்கும். அதற்குள் சென்றால் set expirations என்ற ஆப்ஷன் இருக்கும். அந்த ஆப்ஷனுக்குள் சென்றால் நீங்கள் அனுப்பும் மெசேஜ் ஒரு வாரம், 1 மாதம், 2 மாதம், 3 மாதம் மற்றும் 5 வருடங்கள் என எப்போது நினைக்கிறீர்களோ அப்போது அழிந்து விடுமாறு செட் செய்து கொள்ளலாம்.
அதேபோன்று நீங்கள் அனுப்பும் மெயில்களை பாஸ்வேர்ட் போட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். அதற்கு Recure Passcode என்ற ஆப்ஷனுக்குள் சென்றால் SMS passcode என்ற ஆப்ஷன் இருக்கும். இதில் நீங்கள் மெயில் அனுப்பும் நபரின் மொபைல் நம்பரை கொடுத்து விட்டால் எஸ்எம்எஸ் பாஸ்கோடு வழியாக சென்று விடும். மேலும் பாஸ்வேர்டு தெரிந்தவர் மட்டுமே அந்த மெயில் பாக்ஸை ஓபன் செய்து பார்க்க முடியும்.