Categories
உலக செய்திகள்

அஜ்மானில் பொதுமக்களுக்கு புதிய நடமாடும் மருத்துவ நிலையம்…!!!

 அஜ்மானில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கும், தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதற்கும் நடமாடும் மருத்துவ நிலையம்தொடங்கப்பட்டு 19 நடமாடும் மருத்துவ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வருகின்றது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் எளிதில் கொரோனா பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் வசதியாக அரசு நடமாடும் மருத்துவ நிலையம் அமைப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடமாடும் மருத்துவ நிலையத்தை நேற்று அஜ்மான் காவல்துறை தலைவரும், அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுயைமி  தொடங்கி வைத்துள்ளனர்.

இந்த நடமாடும் மருத்துவ சேவையில் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்த பணியில் ஊழியர்கள் சிறப்புடன் செயல்பட்டு சர்வதேச தரத்துக்கு இணையான வகையில் சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடமாடும் சேவை மையத்திற்கு பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து பரிசோதனைகளை செய்து கொண்டு, தடுப்பூசிகளையும் விழிப்புணர்வுடன் போட்டு செல்கின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடமாடும் மருத்துவ நிலையம் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது. அஜ்மான் பகுதியில் மட்டும் 19 நடமாடும் மருத்துவ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நடமாடும் மருத்துவ சேவை தொடக்க விழாவை அரசு மருத்துவ துறையின் இயக்குனர் ஹமத் தரிம் அல் சம்சி மற்றும் உயரதிகாரிகள் பலரும் கலந்து தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |