Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர சம்பவம்… மர்ம நபர் செய்த அட்டூழியம்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

நார்வேயில் மர்ம நபர் ஒருவர் வில் அம்பை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நார்வேயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் Kongsberg என்ற பகுதியில் மக்கள் மீது வில் அம்பை பயன்படுத்தி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் சிறிய காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் காவல்துறையினர் இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருப்பதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ள பிரதமர் Erna Solberg சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு Drammen-ல் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல் தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்நாட்டின் மேயர் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |