திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்னசாமி. இவருக்கு சொந்தமாக ஒரு தோட்டமும் உள்ளது. இவர் எப்பொழுதும் வேலை முடித்து விட்டு வீட்டில் உணவு உண்டு பின் காற்றோட்டமாக தூங்க தோட்டத்தில் உறங்குவது வழக்கம். அதே போல் நேற்று தனது தோட்டத்தில் உறங்கிக் சின்னசாமி கொண்டிருந்தார்.
அப்பொழுது நள்ளிரவில் இவரது தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சின்னசாமியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர். சின்னசாமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சின்னசாமியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.