பொதுவாக கணவன்மார்கள் தான் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக வழக்குகள் பதியப்படும். ஆனால் தற்போது புதிய விதமாக கணவரை, மனைவி கொடூரமான முறையில் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் யது நந்தன் ஆச்சார்யா. இவர் தன்னுடைய மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவரால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி சம்பந்தப்பட்ட நபர் உரிய முறையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் யதுநந்தன் ஆச்சார்யா தன்னுடைய twitter பக்கத்திலும் இந்த சம்பவம் குறித்து பதிவு செய்துள்ளார். அதில் என்னுடைய மனைவி கத்தியால் என்னை தாக்கியதால் என் கையில் இருந்து ரத்தம் வழிந்தது என்று பதிவு செய்துள்ளார்.
https://twitter.com/yaadac/status/1586333846244507648?s=20&t=De44-KxCXFg1XjUW8M2yLQ