Categories
இந்திய சினிமா சினிமா

“உங்களுக்கு என் அன்பும், வலிமையும்”…. சமந்தா குணமடைய வாழ்த்து சொன்ன “நாக சைதன்யா” தம்பி… வைரலாகும் பதிவு…..!!!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”யசோதா”.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனயடுத்து, இவர் நேற்று தனது சமூக வலைதளபக்கத்தில் தனக்கு ‘தசை அலர்ஜி’ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த இவர் தற்போது தன்னுடைய உடல்நல பாதிப்பு குறித்து வெளிப்படையாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் போராடிக் கொண்டிருக்கிறேன், விரைவில் பூரண குணமடைவேன்!"- தன் உடல்நலப்  பிரச்னை குறித்து சமந்தா | Samantha reveals she has been diagnosed with the  autoimmune condition ...

இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில், இவரின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் தம்பியான அகில் இவருக்கு ‘டியர் சாம் உங்களுக்கு எனது அனைத்து அன்பும், வலிமையும்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |