Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு… “என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்”… முதலமைச்சர் ட்விட்டர் பதிவு…!!

நாளை கொண்டாட இருக்கும் ஆசிரியர் தின நாளுக்கு முதலமைச்சர் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரை செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதன் தனி சிறப்பு என்னவென்றால் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் மற்ற ஆசிரியர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், தங்களின் நலன் கருதாமல் மாணவர்களின் நலன் கருதி உழைக்கும் அனைத்து ஆசிரியர்களின் பெருமையை நிலைநாட்டும் விதத்திலும் இந்த ஆசிரியர் தினமானது செப்டம்பர் 5 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருட ஆசிரியர் தினம் வர இருக்கும் நிலையில் முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். வருங்காலத் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச்செல்வம் தந்து, ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை போதித்து வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள்” இவ்வாறு அவர் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |