Categories
இந்திய சினிமா சினிமா

அடக்கடவுளே!…. பிரபல இயக்குனர் ராஜமவுலிக்கு இப்படி ஒரு நோயா….? பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்….!!!!

இந்திய சினிமாவில் தற்போது பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராஜமவுலி. தெலுங்கு சினிமா இயக்குனரான ராஜமவுலி பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டார். இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுகளிலும் நாமினேட் ஆகியுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரேயா சரண் ராஜமவுலிக்கு நோய் இருப்பதாக தற்போது ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்ரேயா ஒரு பேட்டியில் கூறியதாவது, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் சூட்டிங் சமயத்தில் திடீரென ராஜமவுலிக்கு ஆஸ்துமா அட்டாக் வந்தது. இருப்பினும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு தொடர்ந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் என்று கூறியுள்ளார். நடிகை ஸ்ரேயா ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் ராம்சரனுக்கு அம்மா வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் ராஜமவுலிக்கு ஆஸ்துமா அட்டாக் இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |