பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர்-ஆலியா பட். இந்த தம்பதிக்கு கடந்த மாதம் ரஹா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூர் சமீபத்தில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பேசினார். அப்போது அவரிடம் தந்தையான தருணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ரன்பீர் நான் தந்தையாவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டேன். நான் தந்தையாக பொறுப்பேற்பதற்கு எதற்காக இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டேன் என்பதை நினைக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.
ஏனெனில் என்னுடைய மகளுக்கு 20 அல்லது 21 வயது இருக்கும் போது எனக்கு 60 வயது இருக்கும். அப்போது அவளுடன் சேர்ந்து என்னால் கால்பந்து விளையாட முடியுமா? இல்லை ஓடியாடி விளையாட தான் முடியுமா? இது போன்ற அழகிய தருணங்களை தவற விட்டு விடுவேன் என்று நினைக்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. இதனையடுத்து மனைவி ஆலியா குறித்து கூறுகையில், குடும்பத்தில் நான் இல்லாத நேரத்தில் அவர்தான் சமாளித்துக் கொள்கிறார். இதேபோன்று நான் இல்லாத நேரத்தை அவளும் அவள் இல்லாத நேரத்தை நானும் சமப்படுத்தி கொள்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டுக்கு 10 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.