தலைக்கறி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
ஆட்டுத்தலை – 1
தேங்காய் – 1/4 கப்
வத்தல் – 10
வெங்காயம் – 10
சீரகம் – 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 5 கரண்டி மல்லிவிதை – 2 தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றிஅதில் 10 வெங்காயம், 2 தேக்கரண்டி சீரகம் போட்டு கிளறி, அதனுடன் ஆட்டு தலைக்கறி, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு வதக்கி கொள்ளவும்.
அதனை தொடர்ந்து வறுத்து அரைத்த மல்லி விதை மற்றும் வற்றல் கலவை, 1/4 கப் தேங்காய்ப் பால் ஊற்றி குக்கரை மூடி வேக வைக்கவும்.
விசில் அமர்ந்த பின் திறந்தால் சுவையான மற்றும் அட்டகாசமான தலைக்கறி குழம்பு தயார்.