Categories
மாநில செய்திகள்

மதுரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்…. விரைவில் திறப்பு விழா?….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெருமையை போற்றும் விதமாக மதுரையில் உள்ள புது நத்தம் சாலையில் அமைந்துள்ள பொது பணித்துறை வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நூலகமானது 2.70 ஏக்கர் நிலத்தில் 1,13,288 சதுர அடி பரப்பில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 8 தளங்களுடன் கட்டப்படுகிறது. இந்த நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி நடைபெற்ற நிலையில் தற்போது நூலகம் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 2-ம் வாரத்திற்குள் நூலகத்தை கட்டி முடிப்பதற்கு பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நுலகமானது இலவச வைபை வசதி, எஸ்கலேட்டர், மின்சார லிஃப்ட் வசதி, தரைதளத்தில் வரவேற்பு மண்டபம், தமிழ் கலாச்சாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு அரங்கம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு, 100 கார்கள் மற்றும் 200 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துமாறு பார்க்கிங் வசதி போன்ற நவீன வசதிகளுடன் அமைக்கப்பட இருக்கிறது. அதோடு 2.50 லட்சம் புத்தகங்களும் இந்த நூலகத்தில் இடம்பெறுகிறது. மேலும் இந்த நூலகம் ஆனது தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வர பிரசாதமாக அமையும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |