மக்களுக்காக பலவித முதலீட்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக பல சிறப்பான ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. அரசு திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய பணத்துக்கு பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானம் கிடைக்கிறது. இத்திட்டம் மூத்தகுடிமக்கள் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என அழைக்கப்படுகிறது. இந்த PMVVY திட்டத்தில் 60 வயதிற்கு பின் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து பங்களிப்பதன் வாயிலாக மாதந்தோறும் ரூபாய்.18500 ஓய்வூதியமாக பெறலாம்.
10 வருடங்கள் கால அளவு கொண்ட இத்திட்டத்தை LIC செயல்படுத்துகிறது. இவற்றில் 60 வயது மற்றும் அதற்கு அதிகமான மூத்த குடிமக்களுக்கு அரசானது மானியத்துடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் மூத்தகுடிமக்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு (அ) வருடாந்திர ஓய்வூதிய வசதி வழங்கப்படுகிறது. மொத்தம் ஆக முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் ரூபாய்.15 லட்சம் செலுத்துவதன் வாயிலாக நல்ல வருமானம் கிடைக்கும். PMVVY திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தின் முதல் தவணைத் திட்டம் வாங்கிய நாளில் இருந்து 1ஆண்டு, 6 மாதங்கள், 3 மாதங்கள் (அ) 1 மாதத்திற்குப் பின் துவங்குகிறது.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமான ஓய்வூதியமானது மாதம் ரூபாய்.1000, அதிகபட்சமான ஓய்வூதியம் மாதம் ரூபாய்.9250 ஆகும். இதன் குறைந்தபட்சமான கொள்முதல் விலை ரூபாய்.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமான கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய்.15 லட்சம், காலாண்டு ஓய்வூதியம் ரூ.14,89,933, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.14,76,064 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.14,49,086 ஆகும்.