இந்தியன் ரயில்வேயானது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவிக்கவுள்ளது. கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரயிலில் பயணிக்கக்கூடிய ஒவ்வொரு குடிமக்களும் சராசரியாக 53% கட்டணத்தில் தள்ளுபடி பெற்று வருகின்றனர். அத்துடன் திவ்யாஞ்ஞர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர பல்வேறு வகையான சலுகைகள் கிடைக்கும்.
லோக்சபாவில் ரயில்வே அமைச்சரிடம் ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை ரயில்வே மீண்டுமாக வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது “2019-20 ஆம் வருடத்தில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு ரயில்வே 59,837 கோடி ரூபாய் மானியமாக வழங்கி இருக்கிறது. இது தவிர்த்து ஸ்லிப்பர் மற்றும் 3வது ஏசியில் பயணிக்கும் மூத்தகுடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.