தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் நாடாளுமன்றத்தின் எம்.பியும் கூட. அதன்பிறகு 3 தலைமுறையாக முன்னணி இசையமைப்பாளராக ஜொலிக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது சிறப்பு கௌரவம் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி நவம்பர் 11-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கய சிறப்பிக்கப்படுகிறது.
அதன் பிறகு உமையாள்புரம் சிவராமன் என்பவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. இவர்கள் 2 பேருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி சிறப்பிக்க இருக்கிறார். இந்நிலையில் கௌரவ டாக்டர் பட்டம் பெறவிருக்கும் இளையராஜாவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனி விமானத்தில் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.