சாலையில் முறிந்து விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழ் நாடுகாணி என்ற இடத்தில் பெரிய மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். சுமார் 1 மணி நேரம் கழித்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.