Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்காக போராடிய விவாசாயி கொலை – கொலையாளி கைது

கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயி லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் விவசாயம் செய்பவர் கன்னியப்பன். கன்னியப்பனின் நிலத்தின் அருகே கல்குவாரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கண்ணியப்பனும்  அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலரும் கல்குவாரிக்கு  வரும் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு விவசாய நிலத்திற்கு சென்ற கன்னியப்பன், கல்குவாரிக்கு  வந்த லாரி ஒன்றை மறித்துள்ளார் இதனால் லாரி ஓட்டுநர் பலமுருகனுக்கும் கண்ணியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் கொண்ட பாலமுருகன் கன்னியப்பன் மீது லாரி ஏற்றி கொலை செய்து விட்டு தப்பி உள்ளார். கன்னியப்பனின் மரணம் குறித்து கன்னியப்பன் மகன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் லாரி ஓட்டுனர் பாலமுருகனை கைது செய்தனர்.

Categories

Tech |