Categories
உலக செய்திகள்

மனித உடலை சமைத்து சாப்பிட்ட தந்தை-மகன்…. கொலைக்கு பின் நடந்த கொடூரம்…!!

முன்னாள் போலீஸ் அதிகாரியை கொலை செய்துவிட்டு அவரது உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உக்ரைன் நாட்டில் காவல் துறை அதிகாரி ஒருவர் கழுத்தை வெட்டி அவரது உடல் பாகங்களை சமைத்த தந்தை-மகன் மீது வழக்கு பதிவாகி சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாக்சிம் மற்றும் யாரோஸ்லாவ் ஆகியோர் யெவ்ஜெனி பெட்ரோ என்பவரை உக்ரேனில் கொலை செய்ததாக குற்றம் சுமத்த பட்டனர்.

விசாரணை முடிவடைந்த நிலையில் தந்தை-மகன் இருவருக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 42 வயதான மாக்சிம் மற்றும் அவரது 21 வயது மகன் யாரோஸ்லாவ் முன்னாள் போலீஸ் அதிகாரியான பெட்ரோ என்பவருடன்  சம்பவம் நடந்த அன்று மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திக் கொண்டிருந்த அவர்களிடையே கெய்வின் படைகளுக்கும் மாஸ்கோ சார்பு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் குறித்து வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தந்தையும் மகனும் பெட்ரோவை   கொலை செய்துள்ளனர்.

பின்னர் கூரான கத்தியால் பெட்ரோவின் கழுத்தை துண்டித்து அவரது உடல் பாகங்கள் அனைத்தையும் தனித்தனியாக துண்டாக்கி எடுத்துள்ளார். வெட்டப்பட்ட உடல் பாகங்களை பின்னர் சமைத்து ஆதரவற்ற யுரா  என்பவருக்கு சாப்பிடுவதற்காக கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் காவல்துறையினர் சார்பில் யுராவுடன்  சேர்ந்து தந்தை மகன் இருவரும் சாப்பிட்டதாக நீதிமன்றத்தில்  ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தலை இல்லாத சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையில் அது காணாமல் போன முன்னாள் போலீஸ் அதிகாரியின் சடலம் என உறுதி செய்துள்ளனர்.

Categories

Tech |