அமெரிக்காவில் ஒரு இளம்பெண், இளைஞரை ஆசைக்காட்டி அழைத்து சென்று, ஒரு உயிரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் நியூ மெக்ஸிகோ என்னும் பகுதியில் வசிக்கும் நிகோலஸ் என்ற இளைஞர் அனபெல்லா என்ற 18 வயது இளம் பெண்ணுடன் இணையதளத்தில் அறிமுகமாகி இருக்கிறார். அதன்பின்பு, அனபெல்லா அந்த இளைஞரிடம் ஆசையாக பேசி அருகில் இருக்கும் ஒரு பூங்காவிற்கு வரவழைத்திருக்கிறார்.
அங்கு நிகோலஸ் சென்றவுடன், அந்தப் பெண்ணுடன் இளைஞர்கள் மூவர் இருந்திருக்கின்றனர். அவர்கள், நிக்கோலஸிடம் நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரின் வீட்டிற்கே அழைத்து சென்றுள்ளனர். அங்கு நிகோலஸின் சகோதரர் எலியாஸ் இருந்திருக்கிறார்.
அவரிடம், ஆயிரம் டாலர்கள் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் எலியாஸ், தன் துப்பாக்கியை கொண்டு வந்து, நிக்கோலஸை விடுமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார். அப்போது, அனபெல்லாவுடன் வந்த ஒரு இளைஞர், எலியாஸை சுட்டு கொன்று விட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பில் அனபெல்லா கடந்த திங்கட்கிழமை அன்று காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார். மேலும், எலியாஸை கொன்ற நபரும் சரணடைந்துவிட்டார். அவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.