Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணிட்டு இது வேறையா…. காண்டிராக்டருக்கு நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

பந்தல் காண்டிராக்டரை ஊழியர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாயக்கன் புதூர் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பந்தல் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவர் கந்தசாமி இடம் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பந்தல் அமைத்ததற்கான பணத்தை கந்தசாமியிடம் சுகுமார் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபமடைந்த சுகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கந்தசாமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து சுகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |