Categories
உலக செய்திகள்

இது தான் காரணமா..! சிறுமியின் கண்ணெதிரே நடந்த கொடூரம்… அம்பலமாகிய அதிர்ச்சி..!!

இந்தியாவில் உள்ள மராட்டிய மாநிலத்தில் பெண் ஒருவர் காதலின் உதவியுடன் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இந்த கொலை சம்பவம் சுமார் 12 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 28 வயதான ரஷீதா ஷேக் என்பவரை கைது செய்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவருடைய காதலன் அமித் மிஷ்ரா என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலையில் குற்றவாளிகள் இருவரும் சேர்ந்து ரயீஸ் ஷேக் என்பவரை சிறுமியான மகளின் கண்ணெதிரே கொடூரமாக கொலை செய்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கணவரின் சடலத்தை தனது படுக்கை அறையிலேயே புதைத்துவிட்டு அங்கிருந்து ரஷீதா ஷேக் மாயமாகியுள்ளார்.

இதற்கிடையே அக்கம் பக்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஊழியரான ரயீசை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் ரயீஸின் சகோதரர் குடியிருப்புக்கு சென்று மேற்கொண்ட பரிசோதனையில் இந்த கொலையானது அம்பலமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த சடலமானது காவல்துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |