Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கட்டையால் தாக்கிய கணவர்…. போலீஸ் வலைவீச்சு….!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி பகுதியில் முத்து-பாண்டிசெல்வி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக முத்துவிற்கு தனது மனைவியான பாண்டிச்செல்வியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாண்டிச்செல்வி தனது பிள்ளைகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த முத்து அருகிலிருந்த விறகு கட்டையை எடுத்து தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதனால் முத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் பாண்டிசெல்வியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பாண்டி செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து தப்பி ஓடிய முத்துவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |