Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிக்க பணம் கேட்ட மகன்… விஸ்வரூபம் எடுத்த தந்தை… திருப்பத்தூரில் பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூரில் குடிக்க பணம் கேட்ட மகனை, தந்தை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். விக்னேஷ் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு கஞ்சா, மது உள்ளிட்ட பல பழக்கங்கள் இருந்துள்ளது. விக்னேஷ் தினமும் கஞ்சா அடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று விக்னேஷ், தந்தை செல்வராஜிடம் கஞ்சா அடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். செல்வராஜ் பணம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் செல்வராஜை, அவரது மகன் விக்னேஷ் மோசமாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், மகனை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் விக்னேஷை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த கொலை குறித்து கந்திலி காவல்துறையினர் செல்வராஜ் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |