Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஓட ஓட விரட்டிய மர்மநபர்கள்… அ.தி.மு.க கவுன்சிலருக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

அ.தி.மு.க கவுன்சிலரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்று தலையை துண்டித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜேஷ் என்பவர் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை இவர் வீட்டில் இருந்து இருசக்கரவாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது இவரை பின்தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களும் 1 காரும் சென்றுள்ளது. இதனை அறிந்த அவர் வேகமாக சென்றுள்ளார். ஆனால் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் காரின் மூலம் அவருடைய இருசக்கரவாகனத்தை இடித்து கீழே தள்ளியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் உயிர் பிழைப்பதற்காக அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார். இதனை கண்டா மர்மநபர்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று ராஜேஷை தாக்கி அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தலையை மட்டும் எடுத்துக் கொண்டு முத்துப்பேட்டை ஆசாத் நகரில் உள்ள சாலையில் தலையை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை கைப்பற்றி பின்னர் ஆசாத் நகர் பகுதியில் வீசப்பட்ட தலையை கைப்பற்ற சென்றபோது ராஜேஷின் உறவினர்கள் துண்டித்த தலையை எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கொலை செய்தவர்கள் யார் ? என்ன காரணத்திற்காக கொலை செய்துள்ளனர் ? போன்ற பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |