இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரையை சார்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருடன் தங்கதுரை என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கதுரையிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து பின்னர் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று ஜெயஸ்ரீயை அவர் அழைத்துக்கொண்டு காட்டுபகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு தங்கதுரையும் அவரது நண்பர் ஜெகநாதனும் ஜெயஸ்ரீயின் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அதே பகுதியில் சாலை ஓரமாக ஜெயஸ்ரீயின் உடலை போட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தங்கதுரை மற்றும் ஜெகநாதன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சூப்பிரண்டு ரவளிபிரியா கலெக்டரிடம் கொடுத்த பரிந்துரையின்பேரில் இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.