டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் முரளிதரர். அவர் சென்னை மற்றும் தென்னிந்தியாவிலே நன்கு பரிச்சயமான பிரபல வக்கீல் ஆக இருந்து. பின்னர் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அவரை உச்சநீதிமன்றம் ஒரிசா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளித்திருந்தது;
தற்பொழுது அவர் ஒரிசா நீதிமன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அப்படிப்பட்ட நிலையிலே அவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பணியிடை மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலே மூத்த நீதிபதிகள் இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தார்.