Categories
உலக செய்திகள்

ஒரு காருக்கு இவ்ளோ பெரிய அக்கப்போரா….? தற்கொலை செய்துகொண்ட முன்னாள் சபாநாயகர்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் பாராளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு வரை  துணை சபாநாயகராக இருந்தவர் செல்மென்ட் சிவாலா. மாற்றுத்திறனாளியான இவர் தனது பதவி காலத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். சில மாதங்களில் அந்த கார் விபத்துக்குள்ளாகியது. இந்நிலையில் விபத்துக்குள்ளான அந்த காரை சரி செய்யும் செலவை பாராளுமன்றம் தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை ஏற்ற பாராளுமன்றம் இது குறித்து ஆலோசனை செய்து வந்தது அந்த சமயத்தில் காருக்கான காப்பீட்டை அவர் புதுப்பிக்காததால் அது காலாவதியானது. இதனால் காருக்கான செலவை ஏற்க முடியாது என பாராளுமன்றம் கூறிவிட்டது.

இதனால் காரை சரி செய்யும் செலவை பாராளுமன்றம் ஏற்காததால் செல்மென்ட் மிகுந்த மன வேதனை மற்றும் விரக்தியில் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று பாராளுமன்றம் வந்த செல்மன்ட் சிவாலா தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட செல்மெட்டின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |