முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார்.
அவருக்கு வயது 82. முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நிதித்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜகவை வழுப்படுத்திய தலைவர்களில் ஜஸ்வந்த் சிங்கும் முக்கியமானவர் என பிரதமர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.