Categories
உலக செய்திகள்

மத்திய ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர்…. ஆயுள் தண்டனை கைதி…. கொரோனாவால் உயிரிழந்த சோகம்….!!

ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த மத்திய ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டின் அதிபராக 8 வருடங்களாக ஹசன் ஹப்ரி என்பவர் இருந்துள்ளார். இவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சுமார் 40 ஆயிரம் பேரை கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் பல போர் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து 1990 ஆம் ஆண்டு சாட் நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்த ஹசனின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவர் மீதான போர்க்குற்றங்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு ஹசனிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தனது வாழ்க்கையை சிறையில் கழித்து வந்த ஹசனிற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹசன் கொரோனாவிற்கு சிகிச்சை பெறும் நோக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Categories

Tech |