முன்களப்பணியாளர்களாக செயலாற்றியவர்களுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் போது முன்களப்பணியாளர்களாக செயலாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை குடியுரிமை அமைச்சரான Marlene Schiappa நேற்று வெளியிட்டுள்ளார். அதில் “சிறப்பு திட்டத்தின் கீழ் 16,000 பேர் பிரெஞ்சு குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 12,012 பேருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒருவர் பிரான்சில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டுமே குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியும். ஆனால் சிறப்பு திட்டத்தின் மூலம் அவசிய பணியில் இருப்பவர்கள் இரண்டு ஆண்டுகள் பிரான்சில் வாழ்ந்தால் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம். மேலும் தற்போது குடியுரிமை வழங்கப்பட்ட முன்களப்பணியாளர்களில் மருத்துவம், சுகாதாரத்துறைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.