Categories
அரசியல் மாநில செய்திகள்

முந்திரிக்கொட்டை அரசாங்கமே.. புத்திசாலின்னு நினைக்காதீங்க… உங்கள பத்தி நல்லா தெரியும்…  திமுகவை நக்கலடித்த ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உச்சநீதிமன்ற நீதிபதி பிடிஆரை குறிப்பிட்டு பேசியது,  இதுபோன்ற முந்திரி கொட்டை அரசாங்கத்திற்கும், அதே போல எல்லாவற்றிற்கும் நாங்கள் தான் என்கின்ற மாதிரி இருக்கிறார்கள். அது போன்ற இருக்கின்ற அரசாங்கத்திற்கு சரியான ஒரு கொட்டு கொட்டி விட்டார், நீங்கள் புத்திசாலி என்று நினைக்காதீர்கள், உங்களை பற்றி எனக்கு தெரியும். எந்த அளவிற்கு உங்களுடைய புத்தி இருக்கும் என்று தெரியும்..

இலவசங்களை பொறுத்தவரையில் நம்முடைய மாநிலத்தினுடைய நிலைமையை பார்க்க வேண்டும், நம்முடைய மாநிலம் 1921ல் இருந்து முதல் அரசாணை போடப்பட்டு இட ஒதுக்கீட்டில் இருந்து, அதேபோல ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள்,  பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள், சீர் மரபினர்கள் இப்படி எல்லா தரப்பட்ட தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் இப்படி எல்லா தரப்ப்பட்ட மக்களையும் ஒரு கைதூக்கி விடுகின்ற அரசு என்ற வகையில்,  பல திட்டங்களை ஆதி காலத்தில் இருந்தே தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.

உதாரணத்திற்கு பேரறிஞர் அண்ணா காலத்தில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி கொடுத்தோம். ஏனென்றால் ஏழை எளிய மக்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும். அதற்காக அதை தப்பு சொல்ல முடியாது. அதே நேரத்தில் நம்முடைய பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம். இந்தியாவிலேயே கிடையாது, மின்சாரத்தை வீட்டில் பார்த்திருக்க மாட்டார்கள்.

உங்க வீடு குடிசையா ? ஒரு விளக்கு இலவசம் எடுத்துக்கோ..  இந்தியாவிலேயே ஒரு குடிசை மின்சார திட்டம் புரட்சித் தலைவர் கொண்டு வந்தார். கிராமங்களில் இருந்து பஸ்ஸை பார்த்ததில்லை, பெட்ரோல், டீசல் நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை. அந்த கிராமத்தில் பேருந்து இருக்க வேண்டும் என்று சொல்லி பேருந்து விட்டார் என தெரிவித்தார்.

Categories

Tech |