முந்தானை முடிச்சு படத்தில் நடித்த குழந்தை பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அண்ணன் தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியல் ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா ‘பூவிழி வாசலிலே’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ படத்தில் குழந்தையாக நடித்தது நடிகை சுஜிதா என்பது தெரியவந்துள்ளது.