மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் திடீரென வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் காரணமாக அவசரஅவசரமாக சர்வ்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது .
இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பாக புல்வாமா தாக்குதல் ஆனது நடைபெற்றது இதனையடுத்து அந்த தாக்குதலுக்கு பின்பு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் தொடுத்தது மேலும் இன்றைய தினம் வரை எல்லைப் பகுதிகளில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டம் என்பது நிலவி வருகிறது.
மேலும் இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலால் எல்லைப் பகுதிகள் மட்டும் அல்லாமல் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன இதனையடுத்து மும்பை போன்ற முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது .
குறிப்பாக, மும்பை ரயில் நிலையம் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லக்கூடிய விமானத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின இதனை அடுத்து சாங்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 263 பயணிகளுடன் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு பதினொன்று முப்பது மணிக்கு மும்பையில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது இன்று காலை விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை தகவல் வந்துள்ளது இதையடுத்து விமானம் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானத்தை சோதனையிட்டபோது வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை மேலும் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது இதனையடுத்து விமானத்தில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த தாய் மகனை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்