மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்துள்ளது
2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோஹித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தொடக்கத்தில் மும்பை அணி ஆதிக்கம் செலுத்தியது. தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில் டிகாக் 3 சிக்ஸர்கள் பறக்க விட்டார்.ரோஹித் சர்மா பொறுமையாக ஆட டிகாக் அதிரடியில் மிரட்டினார். அதன் பிறகு ஷர்த்துள் தாகூர் வீசிய 5வது ஓவரில் டிகாக் 29 (17) ரன்கள் எடுத்த நிலையில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதை தொடர்ந்து தீபக் சாஹர் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 15, க்ருனால் பாண்டியா 7 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் மும்பை அணியின் ரன் ரேட் குறைந்தது.
அதன் பின் இஷான் கிஷனும் பொல்லார்டும் இணைந்தனர்.பொல்லர்ட் பொறுப்புடன் விளையாடி வந்த நிலையில் இஷாந்த் கிஷன் நிலைத்து நிற்காமல் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவும் பொல்லார்டும் இணைந்தனர். எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் தீபக் சாஹர் வீசிய 19வது ஓவரில் 16 (10) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த வீரர்கள் ராகுல் சாஹர், மெக்லானகன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் சாஹர் 4 ரன்கள் மட்டுமே வீட்டுக் கொடுத்தார்.
இறுதியில் பிராவோ வீசிய கடைசி ஓவரில் கடைசி 2 பந்தில் பொல்லார்ட் 2 பவுண்டரி அடிக்க 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. பொல்லார்ட் 25 பந்துகளில் 41* ரன்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்கவில்லை. சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஷர்த்துள் தாகூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 150 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.