தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது “கொரோனா தொற்று எண்ணிக்கையைப் பொறுத்து வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்ற முடிவுகள் எடுக்கப்படும். மேலும் வரும் வாரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.