மேஷம் ராசி அன்பர்களே, இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாகவே இருக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை கொடுக்கும். சிந்தனை வளம் பெருகும். நீங்கள் பார்க்க நினைத்த நபர் ஒருவர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். சாமர்த்தியமான உங்களுடைய செயல்களை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கௌரவம் உயரும். மகிழ்ச்சியை கொடுக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை ஏற்படும். நீங்கள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் மட்டும் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுதும் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். வாக்குறுதிகளை இன்று முற்றிலும் நீங்கள் தவிர்க்க வேண்டும். மாணவச் செல்வங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்து பாடங்களைப் படியுங்கள், புரிந்துகொண்டு பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்ட காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று பாராட்டும் புகழும் கூடும் நாளாகவே இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விஐபிக்களின் சந்திப்பு உண்டாகும். இன்று திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாகவே முடியும்.
குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றம் அடைய உதவும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று ஆதாயம் கிடைக்கும். மனமும் மகிழ்ச்சியாகவே இருக்கும். இன்று மாணவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவியும் நாளாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்காரத்தை வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை எதிர்கொள்ளுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாடாகவே இருக்கும். வரவும், செலவும் சமமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமை அடைவீர்கள். இன்று பணவரவை பொருத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. உங்களுடைய செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமதமாகவே விலகிச்செல்வார்கள்.
தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி நல்லபடியாகவே நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டுகளை பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரக்கூடும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெண்மை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,வெண்மை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்
கடகம் ராசி அன்பர்களே, இன்று துயரங்கள் நீங்க அம்பிகையை வழிபட வேண்டிய நாளாகவே இருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது அவசியம். இன்று சாதுரியமான பேச்சால் முன்னேற்றம் அடைவீர்கள். ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவு சிறப்பாக தான் இருக்கும். காரியத்தடைகள் நீங்கும். செல்வம் சேரும், செல்வாக்கு உயரும்.
வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறிதேனும் தடை ஏற்படும். விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். விளையாட்டை ஏரங்கட்டி விட்டு பாடத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்
விருந்தினர் வருகை இருக்கும், தடைபட்டு வந்த திருமணம் காரியங்கள் சாதகமாகவே முடியும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக செயல்படுங்கள். மாணவர்கள் விளையாடிவிட்டு பாடத்தை படியுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் . அது மட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைப்பட்டுவந்த காரியங்கள் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சு ஆதாயம் உண்டாகும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாகவே தான் இருக்கும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும். விளையாட்டை கூடுமானவரை தடை செய்துவிட்டு பாடங்களில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.
துலாம் ராசி அன்பர்களே, இன்று பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாளாகவே இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்துகளால் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.இன்று உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயர செய்வார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பயணம் மூலம் நன்மை இருக்கும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேளைக்கு இப்பொழுது பாராட்டுகளும், அதன் மூலம் சன்மானம் கிடைக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு படியுங்கள், படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியங்களில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்
போட்டிகள் மறையும் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
தனுசு ராசி அன்பர்களே, நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரக் கூடும். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். நீங்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுகளையும் பெறுவீர்கள்.சின்ன விஷயங்களில் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது மட்டும் நல்லது. வேற்றுமொழி பேசுபவர்களால் நன்மை ஏற்படும். சொன்ன சொல்லையும் காப்பாற்றி விடுவீர்கள். நீங்கள் நினைத்ததை செய்து காட்டுவீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை:தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
மகரம் ராசி அன்பர்களே, இன்று விரயங்களை சுப விரயமாக மாற்றிக்கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். இன்று தெய்வீக வழிபாடு குதூகலத்தை கொடுக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் கொஞ்சம் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை கொடுக்கும்.
வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறு ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூல் தாமதமான போக்கே காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் ஏற்படும். இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், சிறப்பாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீளம் நிறம்
ஒரு காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் விருந்தினர் வருகையால் செலவு இருக்கும். இன்று உறவினர் வகையிலும் அதிக செலவு இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
மீனம் ராசி அன்பர்களே, இன்று முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாளாகவே இருக்கும். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்று திடீர் கோபங்கள் ஏற்படலாம், நிதானமாக இருப்பது நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. உங்களுடைய தெளிவான சிந்தனை இன்று தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து ஈடுபட்டு அதில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படும், திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகளும் இன்று வசூலாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்